உள்நாடு

ரஞ்சன் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல்

(UTV | கொழும்பு) –  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வாக்குமூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாணப் பத்திரத்தில் ராமநாயக்க உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியதை அவரது சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்சநீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்க, தான் தெரிவித்த கருத்து தொடர்பில் நீதிமன்றில் வாக்குமூலம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.

எதிர்காலத்தில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறைக்கு எதிராக இது போன்ற அவதூறு கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரமாணப் பத்திரம் தலைமை நீதிபதி மற்றும் அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

தனது விடுதலையை சாத்தியமாக்குவதற்கு அயராது உழைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

“23 முஸ்­லிம்­களும் உயிர்த்தஞாயிறு ­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள்” கர்­தினால்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்