(UTV | கொழும்பு) – நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது நீர்கொழும்பு – பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வெளியில் இருந்து உணவுகள் கொண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையினால் வழங்கப்படும் உணவுகளையே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியாட்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 14 நாட்களுக்கு பின்னர் மீளவும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.