உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சனின் உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகள் இன்று

(UTV|கொழும்பு ) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் இன்று(13) விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இறுவெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் முன்வைத்து அது தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைவாக கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம், குற்றப்புலனாய்வு பிரிவு ஒப்படைத்துள்ளது.

அதேநேரம், ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அனுமதி பத்திரம் காலாவதியான துப்பாக்கியும், அதற்கு பயன்படுத்தப்படும் 162 ரவைகளும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா

யாழில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் கூட்டம்

editor

பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் தெரிவுக்குழுவில் முன்னிலை