கேளிக்கை

ரஜினி பிறந்தநாள் – வெளியானது பேட்ட டீசர்

(UTV|INDIA)-கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ரஜினி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசரில், ரஜினி இளமை தோற்றத்தில் இரண்டு கெட்-அப்களில் மாஸ் தோற்றத்தில் வருகிறார். மேலும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசரின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

Related posts

பிரபல பாலிவுட் பாடகர் KK காலமானார்

பாவனா துணிந்து செய்த செயல்!!

(VIDEO)-ரசிகர்களை கவர்ந்த 2.O மேக்கிங் வீடியோ…