கேளிக்கை

ரஜினி பட வெளியீட்டில் மாற்றம்

(UTV|INDIA) – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 168-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவா இயக்கத்தில் டி.இமான் இசையமைப்பில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்கின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தை முன்கூட்டியே வெளியிட செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் இந்தாண்டு ஆயுத பூஜைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

Related posts

சூர்யாவுக்காக லண்டன் பறந்த ஹாரிஸ் ஜெயராஜ்

ஒஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு

நானிக்கு முத்தம் கொடுத்த நடிகை