கேளிக்கை

ரஜினியின் தர்பார் படத்தை வெளியிட தடை

(UTV|இந்தியா ) – மலேசியாவில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்தை ரூ.4.90 கோடி செலுத்தினால் வெளியிடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்து நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியே‌‌ஷன்ஸ் நிறுவனம், சென்னை நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது.

திரைப்படத்தை வெளியிட தடை விதித்தால், அது தயாரிப்பாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, லைக்கா நிறுவனம் ரூ.4.90 கோடியை நீதிமன்ற தலைமைப்பதிவாளர் பெயருக்கு ரொக்கமாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்திவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம். இந்த தொகையை செலுத்தும்வரை மலேசியாவில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

ஹன்சிகா : பிறந்தநாள் சர்ப்ரைஸ்

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து பாடிய கீர்த்தி சுரேஷ்