கேளிக்கை

ரஜினிக்காக இளமையாகிய திரிஷா?

(UTV|INDIA)-விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பேசிய திரிஷா, பேட்ட படத்தில் ரஜினிக்கு போட்டியாக தனது தோற்றத்தை இளமையாக மாற்றி கொண்டதாக திரிஷா கூறியுள்ளார்.

இந்த படத்தை பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’ என்ற படத்தில் திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
நந்தகோபால் தயாரித்துள்ளார். படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நடந்தது.

அதில் விஜய் சேதுபதி, திரிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். சொந்த வாழ்க்கையில் காதல் அனுபவம் இருக்கிறதா? என்று நிருபர்கேட்ட கேள்விக்கு இதுவரை எனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லை. என்றாலும், எனக்கு காதல் படங்கள் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது? சந்தோஷமாக இருந்தது. அவர் படத்துக்கு படம் இளைஞர் ஆகிக்கொண்டே போகிறார். அவருக்கு போட்டியாக நானும் என் தோற்றத்தை இளமையாக்கி கொண்டேன். முன்பை விட, என் உடல் எடையை குறைத்து இருக்கிறேன் என்று த்ரிஷா கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இப்படியா செய்வார் ரகுல் பிரீத் சிங்?

பொள்ளாச்சி விருந்தினராக லாஸ்லியா

இந்தியன் -2வில் கமலுடன் இணையும் துல்கர்