சூடான செய்திகள் 1

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மருத்துவ பீட விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மருத்துவ பீட பேராசியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதன் காரணமாக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கொடுப்பனவுகளை நீக்குவதற்கு எதிராக கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகிய நிலையில், அனைத்து கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி