கிசு கிசு

ரசிகரை வியப்பில் ஆழ்த்திய டோனி… வைரலாகும் வீடியோ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, தன்னை தேடி வந்த ரசிகரின் புகைப்படத்தில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார்.

இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்தது. சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் டோனி, ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடுவாரா என்ற போது, டோனி இருக்கும் வரை அவர் தான் சென்னை அணியின் தலைவர் என்று அந்த நிர்வாகமே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் டோனியின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு போட்டி முடிந்து சென்னை அணி வீரர்கள் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த ரசிகர்கள் டோனியை கண்டவுடன் அவரின் பெயரை சொல்லி கத்தினர்.

அப்போது பெண் ரசிகை ஒருவர் அவர் வரைந்த புகைப்படத்தை காண்பித்த படி இருந்தார். இதைக் கண்ட டோனி உடனடியாக அங்கிருந்தவரிடம் அந்த புகைப்படத்தை வாங்கி வரும் படி கூறி, அதில் தன்னுடைய கையப்பத்தை போட்டு கொடுத்தார். இதை வாங்கிய அந்த பெண் ரசிகையை வியப்பில் ஆழ்த்தினார்.

Related posts

இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்…

ஊரடங்கு அமுல்படுத்த இதுதானாம் காரணம்

வன ஜீவராசிகளின் உயிருக்கு கேள்விக்குறி [PHOTOS]