வகைப்படுத்தப்படாத

ரசாயன தொழிற்சாலை அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA)-வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இதன் காரணமாக வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் 38 லாரிகள், 12 கார்கள் தீக்கிரையாகின. வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குண்டுவெடிப்பா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

 

Related posts

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் ருவான் குணசேகர !

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

Twenty Lankan fisher boats Maldives bound