கேளிக்கை

யொஹானி துபாய் நோக்கி..

(UTV | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தின நிகழ்வுகளில் இலங்கையின் இளம் நட்சத்திர பாடகி யொஹானி டி சில்வா பாட உள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட உள்ளன.

டுபாயின் உலக வர்த்தக நிலையத்தில் இந்த நிகழ்வு நடாத்தப்பட உள்ளது. மெனிகெ மகே ஹித்தே என்ற பாடல் மூலம் யொஹானி புகழின் உச்சத்தை அடைந்துள்ளார்.

யூடியூப் அலைவரிசையில் வெளியிடப்பட்ட இந்தப் பாடலை இதுவரையில் 180 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

Related posts

‘மாஸ்டர்’ மகாராஷ்டிராவில் படுதோல்வி

800 : பின்வாங்கத் தயார் இல்லை

அனிஷாவின் மேல் காதல் மலர இதுவே காரணம்…