உள்நாடு

யூசுப் முப்தி இமாம்களை விமர்சித்தாரா? உமர் யூசுப் பதில்

(UTV | கொழும்பு) –

எமது யூ.டீவில் முப்தி. யூஸுப் ஹனீபா அவர்கள் வழங்கிய  நேரகாணல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனத்திற்கு அவரது புதல்வர் உமர் யூசுப்
வழங்கிய அறிக்கை

எனது அன்புக்குரிய தந்தை அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போது மத்ரஸா பட்டதாரிகள் தமது சேவைகளைத் தொடர, தொடர்ச்சியான பயிற்சிகளைப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து உலமாக்களை,மத்ரஸா விரிவுரையாளர்களை இழிவுபடுத்துவதாகக் கூறி பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களில் அநாகரிகமான முறையில் கருத்துக்களை முன் வைத்து வருவதை அவதானிக்க முடிகிறது. அவர்கள் எனது தந்தையின் கருத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை என்பது கவலை தருகிறது.

ஒரு மகனாக அவரைப் பாதுகாப்பதற்காக நான் இதை எழுதவில்லை, 2015 ஆம் ஆண்டு மத்ரஸாவில் பட்டம் பெற்று வெளியாகியவன் என்ற அடிப்படையில் இதனை எழுதுகிறேன். அவருடனும் அவரது சக ஊழியர்களுடனும் பணிபுரியும் போது அவர் எனக்கு வழங்கிய திறன்களும் பயிற்சிகளும் எனது நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவை செய்வதற்கான பல வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள சந்தர்ப்பம் அமைத்துத் தந்தது. அவை இல்லாமல் இன்று என்னால் இந்த இடத்தை அடைய முடியாமல் போயிருக்கும்.

எனது தந்தை சொன்ன விடயங்கள் யாருடைய முயற்சிகளையும் குறைத்து மதிப்பிடுவதற்காகச் சொன்னவையல்ல. மாறாக தமது பணிகளை இன்னும் வினைத் திறன்மிக்கதாக முன்னெடுக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே சொல்லப்பட்டது என்பதை அவருடைய உரையை நடுநிலையாகக் கேட்கும் எவரும் புரிந்து கொள்வர். சமூகத்திற்கு ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்கும், இந்தத் தலைமுறையினருக்கு எங்கள் சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கும் தேவையான மென் திறன்களைப் பற்றி அவர் பேசுகிறார். எல்லா விடயங்களிலும் எல்லோரும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதில்லை. காலத்திற்குக் காலம் அறிவு,தொழில்நுட்பம் என்பன மாறிக் கொண்டே இருக்கின்றன. காலத்தின் தேவை அறிந்து நாம் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.

உலகில் உள்ள சிறந்த சேவை வழங்குநர்கள் நான் அனைத்து பயிற்சிகளையும் பெற்றுள்ளேன் எனக்கு இனி எந்தப் பயிற்சியும் தேவையில்லை என்றும் ஒருபோதும் கூறுவதில்லை. இன்றைய உலகில் சிரிப்பது முதல் சிம்மாசனத்தில் அமர்வது வரை எல்லாவற்றுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

என்னுடைய மத்ரஸா அனுபவத்தில் எத்தகைய மென் திறன் பயிற்சிகளும் எனக்கு வழங்கப்படவில்லை. அப்படி வழங்கும் மத்ரஸாக்களைப் பற்றி எனக்குத் தெரியாது.

எங்களுக்குப் பயிற்சிகள் தேவையில்லை. நாங்கள் பூரணமானவர்கள் என்று சொல்வோரிடத்தில் கேட்க பல கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. இரண்டு கேள்விகளை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.

  1. உலமாக்களாகிய நாம் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எமது தூதை திறமையாக முன்வைத்திருக்கிறோமா?
  2. உலமாக்களாகிய நாம் நமது சமூகத்தின் அடுத்த தலைமுறை இளைஞர்களுடன் நன்றாக இணைந்திருக்கிறோமா?

இந்தக் கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லை என்றால் அவருடைய முயற்சிகளுக்கு நாம் கூட்டாக ஆதரவு வழங்க வேண்டும்.

எனது தந்தை இலங்கையின் அடுத்த தலைமுறை முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குப் பங்களிப்புச் செய்கிறார். நீங்கள் நினைப்பதை விட அவர் அதிகம் செய்கிறார்.சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவரை உங்களது ஆரோக்கியமற்ற விமர்சனங்கள் மூலம் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

நீங்கள் அவருடைய பணியைப் புரிந்து கொள்ள விரும்பினால்; சமூக ஊடகங்களில் அவரை அவதூறாக விமர்சிப்பதற்குப் பதிலாக அவருடன் உட்கார்ந்து பேசுங்கள்.

அன்புடன்
அவரது அன்பு மகன்

INTERVIEW VIDEO :

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி வெளியானது

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் எவ்விதம் பாதிப்பும் இல்லை – மஹிந்தானந்தா

நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு