உள்நாடு

யுவான் வாங் 5 இனது ஆராய்ச்சி சர்வதேச விதிமுறைகளின்படி நடத்தப்படும் – சீனா

(UTV | பெய்ஜிங்) – யுவான் வாங் 5 கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச விதிகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வான்பின் தெரிவித்திருந்தார்.

பெய்ஜிங்கில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வாங்;

“யுவான் வாங் 5 கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச விதிகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி நடத்தப்படுகின்றன. நடவடிக்கைகள் எந்தவொரு நாட்டின் பொருளாதார நலன்களையும் அல்லது பாதுகாப்பையும் பாதிக்காது, மேலும் மூன்றாம் தரப்பினரால் தலையிடக்கூடாது.”

கடல்சார் ஆராய்ச்சியில் இலங்கையும் சீனாவும் பல வருடங்களாக நெருக்கமான ஒத்துழைப்பை பேணி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், வெற்றி-வெற்றி ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இருதரப்பு உறவுகளின் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தவும், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல வாரங்களாக இடம்பெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகளின் பின்னர் யுயென் வாங் 5 கப்பல் நேற்று (16) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

Related posts

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரவிசெனிவிரட்ண வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.