விளையாட்டு

யுபுனுக்கு தீர்மானமான நாள் இன்று

(UTV | பர்மிங்காம்) – பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியின் ஆடவர் 100 மீட்டர் அரையிறுதிப் போட்டி இன்று(03) நடைபெறுகிறது.

இலங்கையின் ஸ்பிரிண்ட் சாம்பியனான யுபுன் அபேகோன் பங்கேற்கும் பந்தயம் உள்ளூர் நேரப்படி இன்று இரவு சுமார் 11:55 மணிக்கு தொடங்கும்.

நேற்று நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பச் சுற்றில் யுபுன் அபேகோன் 10 வினாடிகள் மற்றும் 06 தசமங்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தைப் பெற முடிந்தது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த ஜூடோ வீரர் ஒருவரும் அணியின் முகாமையாளரும் காணாமல் போயுள்ளனர்.

இவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பர்மிங்காம் பொலிஸாரும் இலங்கை ஒலிம்பிக் கமிட்டியினரும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒருநாள் சுற்றுத்தொடரில் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தான் வசம்

காலியில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானம்-பிரதமர்