உள்நாடு

யுக்திய சுற்றிவளைப்பில் மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

(UTV | கொழும்பு) –

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்ட பிரதான போதைப்பொருள் வர்த்தகர்கள் மூவரின் 106 மில்லியன் ரூபா பெறுமதியான அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குடு ரொஷான், கவிது மதுரங்க மற்றும் ஹெட்டியாராச்சிகே ஸ்ரீயானி ஆகியோரின் சொத்துக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்டு சொத்து மதிப்பில் 610 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களும் 450 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளும் காணியும் உள்ளடங்குவதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் 330 இலட்சம் ரூபா பெறுமதியான பிராடோ வகை ஜீப்களும், 130 இலட்சம் ரூபா பெறுமதியான கேடிஎச் ரக வான் வகைகளும், 76 இலட்சம் ரூபா பெறுமதியான கார்களும், 64 இலட்சம் இலட்சம் ரூபா பெறுமதியான மேலும் சில கார்களும், முச்சக்கரவண்டி உள்ளடங்குகிறது.

மேலும், மாலம்பே பிரதேசத்தில் 45 இலட்சம் பெறுமதியான ஐந்து பேர்ச்சஸ் காணி மற்றும் 240 இலட்சம் பெறுமதியான ரஜவத்த பகுதியில் மாடி வீடு, கொட்டுகொட, ஜாஎலயில் 12.5 பேர்ச்சஸ் காணி மற்றும் இரண்டு மாடி வீடு, ஜாஎலவிற்கு தெற்கே நிவந்தனையில் 150 இலட்சம் பெறுமதியான காணிகள் இதற்குள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குறித்த சொத்துக்களுக்கு தடைவிதிக்க நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

வாகன புகையை கண்டால் வாட்ஸாப்ப் பண்ணுங்க !