உள்நாடு

யுகதனவி மின்நிலைய விவகாரம் எகிறும் தொழிற்சங்க நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) –  யுகதனவி மின்நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு துறைமுகம்,பெற்றோலியம், மின்சாரம் ஆகிய துறைகளின் தொழிற்சங்கத்தினர் இன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாகவும் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் அமைந்துள்ள வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சார சபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வீதியின் ஒரு மருங்கில் முழுவதுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

வரவு செலவுத் திட்டம் இன்று

பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு