உள்நாடு

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் விசேட நடவடிக்கை!

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன் போது போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தத்தம் பிரிவுக்கு உட்பட்ட சட்டவைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்தியுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் , தமது பொலிஸ் பிரிவுக்குரிய நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் வந்த விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும், போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பூனை!

ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

கைதாகியுள்ள எம்பி’கள் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது