சூடான செய்திகள் 1

யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் இரத்து

(UTV|JAFFNA)-யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ்  நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் நேற்று மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளின் கீழ் கடந்த சில வாரங்களாக யாழில் இடம்பெற்ற குற்றங்களை தடுப்பது மிகவும் குறைந்துள்ளதுடன், பொலிஸாரின் பலவீனமான நடவடிக்கைகளும் குற்றங்களைத் தடுக்க முடியாமைக்கான காரணம் எனத் தெரிவித்து, இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் விடு​முறைகள் இரத்துச் செய்யப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில், யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான பொலிஸார் அதிருப்தியடைந்துள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

போலி நாணயத் தாள்களை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

நாளை (19) நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை