உள்நாடு

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

(UTV|யாழ்ப்பாணம்)-யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலப்பகுதியிலும் தாங்கள் பணியாற்றிய போதிலும், தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொழில் சங்கம் ஒன்று முன்வைத்துள்ளமையைக் கண்டித்தும், நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோரை தவிர ஏனைய அனைவரும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிளிநொச்சியில் கோர விபத்து – இருவர் படுகாயம்

editor

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்

O/L மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

editor