சூடான செய்திகள் 1

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

(UTVNEWS|COLOMBO) – வகுப்புப் புறக்கணிப்பை கைவிட்டு இன்று(18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் எதிர்நோக்கும் சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வலியுறுத்தி கடந்த 15ஆம் திகதி முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.

கல்வியை உரிய முறையில் தொடர்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் அறிக்கையினூடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ரவியின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள் [VIDEO]

இன்று மீண்டும் விசேட தெரிவுக் குழு கூடுகிறது