சூடான செய்திகள் 1

யாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு

(UTV|JAFFNA)-யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது.

தொழில் நுட்பக்கூடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சுமார் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்த தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பேராயர் கதிரினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு