உள்நாடுசூடான செய்திகள் 1

யாழ். ஜனாதிபதி மாளிகை அருகில் பகுதியில் பதற்றம்!

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டு, நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவியது.

பின்னர் நீண்ட நேர காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

குறித்த பகுதியில் அதிகமான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின்கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளில் 12.0399 கெக்டேயர் ( 29 ஏக்கர் 3 றூட் 0.20 பேர்ச் ) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

oruvan

Related posts

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் வெட்டு

அத்தியாவசிய சேவைகள்; பதிவாளர் திணைக்களத்தின் நடவடிக்கை

சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு