உள்நாடு

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழவதும் அமுல்படுத்தப்பட்டுருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.

இதற்கமைய இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும்,புகையிரத நிலையத்திற்குள் நுழையும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தமது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

ரயில்வே ஊழியர்களது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வௌியானது.

editor