அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித் பிரேமதாச

2024 ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிமித்தம் வட மாகாணத்துக்கு விஐயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் ஆசி பெறும் பொருட்டு இன்று (31) காலை யாழ் நல்லூர் கந்தசுவாமி
கோவிலுக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதேவேளை யாழ் நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுக் கொண்டார் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

தடுப்பூசி செலுத்தியோருக்கு மாத்திரமே பேருந்துகளில் பயணிக்கலாம்

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!