உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வீடு – பார்வையிட திரளும் மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த வீடு யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15.) அதிகாலை 3 மணியளவில் கரையொதுங்கியதாக தெரிய வருகிறது.

அண்மைக்கால கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இது வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த வீட்டில் பௌத்த மதம் சார்ந்த பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனைப் பார்வையிடுவதற்கு பெரும் எணிக்கையான மக்கள் செல்கின்றனர்.

Related posts

ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தயார் – அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ

editor

பாகிஸ்தான் பிரதமரின் வருகை ஒரு கண்ணோட்டம் [சிறப்பு வீடியோ]

சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்