உள்நாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை!

கடந்த 20.10.2023 அன்று வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன் (வயது 46) என்பவர் கடந்த 20.10.2023 அன்று மேற்படி முகவரியில் உள்ள அவரது வீட்டில் இருந்த வர்த்தக விடயமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் புறப்பட்டு சென்றதில் இருந்து 5வது நாள் அவரது கைப்பேசி இயங்கவில்லை. இந்நிலையில் அவரது மனைவி இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 2024.02.01 அன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எனினும் இதுவரை குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யுத்த காலத்தில் குறித்த நபர் கண்ணிவெடியில் சிக்கியதில் அவரது கால் பறிபோயுள்ளது. இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் 0766348367, 0740910152, 0763934822 என்ற இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்குமாறு குடும்பத்தவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
(இவர் ஒரு முன்னாள் போராளி. போராளி என்ற விடயம் செய்தியில் குறிப்பிட வேண்டாம்)

Related posts

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்

வைத்தியர் ஷாபியின் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் உத்தரவு

editor