வகைப்படுத்தப்படாத

யாழ்தேவி ரயில் சேவைக்கு பதிலாக இ.போ.ச சொகுசு பஸ்சேவை

(UTV|COLOMBO)-ரயில் சேவைகள் இடம்பெறாததை அடுத்து கடுகதி ரயில் சேவைகளுக்கு பதிலாக சொகுசு பஸ்சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது.

காங்கேசன்துறை , யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட தூர இடங்களுக்கு இந்த சேவை இன்று காலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடுகதி ரயில்சேவைகள் இடம்பெறாததினால் ஐந்து சொகுசு பஸ்வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ரயில் பிரிவில் இடம்பெற்று வரும் வேலைப்பகிஷ்கரிப்பின் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபை 5600 பஸ்களை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

ரயில்வே பருவகாலச்சீட்டை பயன்படுத்தி இலவசமாக இலங்கை பஸ்சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

12 பிராந்திய டிப்போக்களை ஒன்றிணைத்து இந்த பஸ்சேவைகளை முன்னெடுப்பதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி பிஎச்ஆர்ரி சந்திரசிறி தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ජාතික සමථ දින සැමරුම අදයි

වැටලීම් රාජකාරියේ සිටි පොලිස්ට පහර දුන් සැකකරුවෙකු අත්අඩංගුවට

வவுனியா வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில்