வணிகம்

யாழில் 02 உற்பத்தி வலயங்கள்

(UTV|COLOMBO)-நிலக்கடலை, மிளகாய் , மாம்பழ உற்பத்திக்காக யாழ்ப்பாணத்தில் இரண்டு வலயங்கள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வுகள் நாளை கணேசபுரம் பிரதேசத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது நாட்டில் நிலக்கடலை மற்றும் உழுந்து உற்பத்தி நாட்டின் தேவைக்கு போதுமானதாக அமையவில்லை என்பதுடன், இந்தியாவிலிருந்து நிலக்கடலையும் உழுந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டில் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்காக 689 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதுடன், உழுந்த இறக்குமதிக்காக இதே காலப்பகுதியில் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதல் இலத்திரனியில் ரயில் மார்க்கம் நிர்மானம்

இலங்கையின் சந்தை நிலைமை குறித்து நாணய நிதியம்

பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றிய கருத்தரங்கு