உள்நாடுசூடான செய்திகள் 1

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

(UTVNEWS | கொவிட் – 19) – தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது .

கொழும்பைப் போன்று கொரோனா வைரசு தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள். மற்றையது உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம்.என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

Related posts

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் வந்த புதிய தகவல்

editor

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

நிலைபேறான அபிவிருத்தயை உருவாக்குவதே எமது இலக்கு