அரசியல்

யார் பேச அஞ்சினாலும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிக்கிறோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

(UTV | கொழும்பு) –

அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுக்குரிய நாடு வழங்கப்பட வேண்டும்.

பாலஸ்தீனத்தில் குழந்தைகள், அப்பாவி சிறுவர்கள், தாய்மார்கள் மற்றும் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல்களையும் படுகொலைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வருட இறுதிக்குள் இரட்டைப் பேச்சும் இரட்டை நிலைப்பாடும் இல்லாமல் இலங்கை பலஸ்தீன மக்களுடன் ஒன்றாக நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 284 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு, கல்குடா, ஏறாவூர் அல் அஸ்ஹர் உயர்தர பெண்கள் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 04 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு மனிதப் படுகொலை நிகழும்போது, ​​அந்த மனிதப் கொலைக்கு காரணமான நாட்டையும் அரசையும் பற்றி வெளிப்படையாக பேச பயப்படக்கூடாது.

இதை வெளிப்படையாக பேச சிலர் பயப்படுகிறார்கள்.

இருந்தாலும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்தும், அவற்றைப் வழிநடத்தும் இஸ்ரேல் பிரதமர் குறித்தும் பெயர் சொல்லி பேசுவதற்கு சிலர் அஞ்சுகின்றனர். உண்மையைப் பேச தான் பயப்படவில்லை.

இந்த 2 நாடுகளும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்பு, ஒத்துழைப்புடன் போரின்றி இணைந்து வாழ வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினது கொள்கை நிலைப்பாடாகும்.

எனவே, பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம், ஒரு நாடு உருவாகும்போது நிலம், மக்கள் மற்றும் அரசாங்கம் என்பன இருக்க வேண்டிய முக்கிய கூறுகளாகும்.

இந்தக் கூறுகள் இருந்தால், சுதந்திர நாடு என்ற சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும், மக்களைக் கொன்று குவித்து, மக்கள் இல்லாத பாலஸ்தீன நிலத்தைப் பெறவே இஸ்ரேல் முயற்சிக்கிறது.

இந்த கொடூரமான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என்பதால் இதனை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வருட இறுதிக்குள் இலங்கை பலஸ்தீனத்துடன் நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்வி மூலம் உருவாகும் மனித மூலதனத்தை திருட முடியாது.

ஸ்மார்ட் கல்வியின் மூலம் பெற்ற அறிவில் ஒரு பெரும் மனித மூலதனமே உருவாக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் மனித மூலதனத்தை யாராலும் திருட முடியாது. அந்த மனித மூலதனத்தைக் கொள்ளையடிக்கவும் முடியாது.

வீடு, பணம், காணி, வாகனங்களை திருடலாம் என்றாலும், அறிவை யாராலும் திருட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கனடா நாட்டின் துணை பிரதமர் இராஜினாமா

editor

முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

editor

முன்னாள் மாகாணசபை உறுப்பினரால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3 ஜீப் வாகனங்கள் மீட்பு

editor