சூடான செய்திகள் 1

யானை தாக்கியதில் இருவர் பலி

(UTV|COLOMBO)-நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிஹிபிட்டிய, ஆதாவல, மடவள உல்பத பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லிஹிபிட்டிய வனப்பகுதிக்கு அருகில் நேற்று (20) இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

மடவள உல்பத பகுதியை சேர்ந்த சுமுது லக்மால் பண்டார ஹேரத் எனும் 30 வயதுடைய ஒருவரும், நாலக ருவன் எனும் 29 வயதுடைய ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

நாவுல நீதிபதியால் மரண விசாரணைகள் நடைபெற உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 பேர் ஆக உயர்வு

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழு முன்னிலையில்

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு-அமைச்சர் ராஜித