கிசு கிசு

யானைச் சவாரிக்கு ருவான் முழு ஆயத்தம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் விடயம் தொடர்பில் இதன்போது தீர்வு காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, வஜிர அபவேர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர் செயற்குழுவில் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பெரும்பாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தனவுக்கு தலைமை வழங்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகந்துரே மதூஷ் இனது லீலையில் இளம் பெண்?

பவி முன்னேற்றம் லொக்குபண்டார கவலைக்கிடம்

ஹிருணிகா’வுக்கு பெண் குழந்தை [PHOTOS]