உள்நாடு

யானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் தீர்ப்பு இன்று!

 இலங்கையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பானது வழங்கப்படவுள்ளது.

குறித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (08.05.2024) அறிவிக்கவுள்ளது. முன்னதாக இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற ஆசனத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பிலேயே இன்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

பிரித்தானிய நாட்டவராக இருந்து கொண்டு  இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டே டயானா கமகேக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இது நிரூபிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை

இன்று முதல் தனியார் பேரூந்து சேவைகள் வழமை

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறிய நற்செய்தி என்ன? முழு உரை தமிழ் வடிவில்