உள்நாடுசூடான செய்திகள் 1

யக்கலவில் அடுக்குமாடி குடியிருப்பு நான்காவது மாடியிலிருந்து மர்மமான முறையில் பலியான பெண்!

(UTV | கொழும்பு) –

யக்கலவில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்  நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – கண்டி வீதி யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள  ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்தே  குறித்த  பெண்  நேற்று முன்தினம் இரவு  உயிரிழந்துள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சதுரிகா மதுஷானி என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

குறித்த மரணத்தில் சந்தேகம்  எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு  வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி தகராறு  நிலவியமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சம்பவ இரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக ஏழு வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இனவாதிகளால் கொல்லப்பட்ட பெளசுல் அமீன் குடும்பத்திற்கு வீடு!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி அமைச்சர் ரிஷாட்டின் வைப்பு!