உள்நாடு

யக்கலமுல்ல பகுதியில் இருவர் கைது

(UTV | கொழும்பு) – யக்கலமுல்ல, எல்ல இகல மற்றும் கல்கந்த பகுதிகளில் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யக்கலமுல்ல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்களிடம் போரா 12 வகை துப்பாக்கிகள் 2 உம் அதற்கான தோட்டாக்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

 தனுஷ்க்க குணதிலக்க பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது

ஐ.சி.சி. கூட்டத்தில் கால அவகாசம் வழங்குமாறு – ஷம்மி சில்வா வேண்டுகோள்

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்