சூடான செய்திகள் 1

மோதரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொழும்பு முகத்துவாரம் – ஹேனமுல்ல வீட்டுத்திட்டத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒருவரான புளுமெண்டல் சங்க என்பரின், உறவினர் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

நேற்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான புளூமெண்டல் சங்க என்பவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

தெபுவன பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல்…