உள்நாடு

மோட்டார் சைக்கிள் – அம்பியூலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றும் அம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

காலி – கொழும்பு வீதியில் தருன சேவா மாவத்தை அருகே, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வாகனம் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அத்தியாவசிய 05 பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பணிப்பெண்கள்