உள்நாடு

மோட்டார் அணிவகுப்பு தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு நாமல் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கல்பிட்டியில் நேற்று(17) இடம்பெற்ற வாகன அணிவகுப்பிற்கு தனது பெயர் எவ்வாறு இணைக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மோட்டார் அணிவகுப்பில் தமக்கோ அல்லது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனக்குத் தெரிந்தபடி, தனியார் ரைடர்ஸ் கிளப் ஒன்றினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தனியார் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்ப ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றை தனது அமைச்சகம் ஊக்குவித்தாலும், வேடிக்கையான சவாரிகள் தனது அமைச்சகத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நேரத்தில் அனைத்து குடிமக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், வாகன அணிவகுப்பை ஏற்பாடு செய்ததில் அரசியல் தொடர்பு உள்ளதா என பொலிசார் விசாரித்து, அதுபற்றி வெளிக்கொண்டு வந்து, அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் நாமல், தான் சம்பந்தப்பட்டிருப்பதாக போலியான செய்திகளை பகிரும் முன் மக்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்கு முன்னர் சரியான உண்மைகளை முதலில் சரிபார்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தினார்.

இந்த மோட்டார் அணிவகுப்பின் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, ஏனெனில் அணிவகுப்பில் கிட்டத்தட்ட 400 மோட்டார் சைக்கிள்கள் பொலிசாருடன் பந்தயத்தில் ஈடுபட்டது பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

மற்றுமொரு காணொளியில், நாடு பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் வேளையில் இது தேவையற்ற நிகழ்வு எனவும், கல்பிட்டியில் அவ்வாறான அணிவகுப்பை நடத்த அனுமதிக்க முடியாது எனவும் கல்பிட்டி வாசிகள் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்துவதைக் காணமுடிந்தது. ரைடர்கள் ஒரு புத்த பிக்கு உட்பட குடியிருப்பாளர்களை அவமரியாதை செய்து, தங்கள் சவாரிக்கு முன்னால் செல்வதைக் காண முடிந்தது.

நாமல் ராஜபக்ச ஏற்பாட்டாளர்களில் ஒருவர் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி, இதனை மறுத்துள்ள பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீதாநாத் காசிலிங்கம், நேற்று ட்விட்டரில் இந்த அணிவகுப்பு அமைச்சர் நாமலுக்கோ அல்லது அவரது சகோதரர்களுக்கோ தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கவுள்ள விசேட கொடுப்பனவு!

‘ரணிலின் செயல்கள் முட்டாள்தனமானவை’ – விஜித

பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பிலான சுகாதார நிபந்தனைகள்