பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கையின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையை ஜனாதிபதி அங்கீகரித்ததோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் தொடர்ச்சியான வளர்ச்சியில் நம்பிக்கையை வெளிப்படுத்தி ஜனாதிபதி ரணில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் தமது எக்ஸ் தளத்தில் தனது வெற்றியைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதன்கிழமை புதிய பிரதமரை வாழ்த்துவதற்காக இந்தியாவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2024/06/img_1735-1-650x896.jpg)
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2024/06/img_1734-1-650x977.jpg)