உலகம்

மொரீஷியஸ் கடலில் 1,000 டொன் எண்ணெய் கசிவு

(UTV|மொரீஷியஸ் ) – கடந்த 25 ஆம் திகதி மொரிஷியஸ் தீவிற்கு அருகில் சுமார் 4000 டொன் எண்ணெய் உடன் சென்ற சரக்கு கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியது.

தற்போது வரை 1,000 டன் எண்ணெய் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் அரசு இறங்கியது. மேலும் நாட்டில் சுற்றுச்சூழல் அவசர நிலையை அரசு பிரகடனப்படுத்தியது.

இதனிடையே கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதைத் தடுக்கும் அரசின் முயற்சிக்கு பெரிதாக பலன் கிடைக்கவில்லை என்பதனால் எண்ணெய் கசிவு மோசமடைந்து வருகிறது.

மேலும் எதிர்வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து எண்ணெய் முழுதும் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடலில் கசிந்துள்ள எண்ணெயை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் தங்களிடம் இல்லாததால் பிரான்சிடம் அவசர உதவி கோரி மொரீஷியஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மொரீஷியஸ் உணவு மற்றும் சுற்றுலாத்துக்காக அதன் கடல்களை முக்கியமாக சார்ந்துள்ளது. இது உலகின் மிகப்பழமையான பவளப் பாறைகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் 1 மில்லியனை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

“டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவரும் உயிரிழப்பு”

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி