சூடான செய்திகள் 1வணிகம்

மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு கேள்வி…

(UTV|COLOMBO) நாட்டின் பழ வகைகளுக்கு வெளிநாடுகளில் கேள்வி நிலவுகின்ற போதிலும் உரிய விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் ஹசீம் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் இலங்கையின் மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு சிறந்த கேள்வி நிலவுகிறது.
எனினும் விநியோக நடவடிக்கைகளை உரிய வகையில் மேற்கொள்ள முடியாதுள்ளது.
தேவையான அளவு அன்னாசி செய்கை மேற்கொள்ளப்படாமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய அளவில் செய்கைகளை மேற்கொள்ளாது பாரிய அளவில் செய்கைகளை மேற்கொள்ளும் போது குறைந்த செலவில் கூடுதல் லாபத்தை பெறுவதோடு விநியோக செயற்பாடுகளையும் உரிய வகையில் மேற்கொள்ள முடியும் என இலங்கை பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் ஹசீம் தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

தேசிய வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து நீதிபதி தற்கொலை

நாலக டி சில்வாவிடம் 09 மணிநேர விசாரணை…