உள்நாடு

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு

(UTV|கொழும்பு) – பேலியகொடை மீன் சந்தை நாளை(25) முதல் மொத்த வியாபாரிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக பேலியகொடை மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேலியகொடை மீன் விற்பனை நிலையத்தில் இருந்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று(24) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் இருந்து மீன்களை கொள்வனவு செய்த பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்றும் கடும் மழை

தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு நியமிக்கப்பட்ட விசேட நிர்வாகத்தினை இரத்துச் செய்யுமாறு உத்தரவு

editor