உள்நாடுசூடான செய்திகள் 1

மொட்டு மேயருக்கு 3 வருட சிறை தண்டனை!

(UTV | கொழும்பு) –

குருநாகல் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (14) குருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பேருக்கு 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இறுதிக்கட்டத்தை எட்டியது தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகள்

மீட்டர் சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம்

கிளிநொச்சி மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி