அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மொட்டுவின் தேர்தல் பிரச்சாரம் ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 02 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பிரச்சார நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் இன்று (25) ஆரம்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், நிலவும் பாதகமான காலநிலையை கருத்திற் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்குவது பொருத்தமானதல்ல என்று கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதன்படி, அடுத்த மாதம் 02 ஆம் திகதி கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளைத் ஆரம்பிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

Related posts

அரிசி விலை குறித்து ஜனாதிபதி அநுர விடுத்த பணிப்புரை

editor

எரிபொருள் விலை திருத்தம் இன்று(13)

தாறுமாறாக உயர்ந்த பெரிய வெங்காயம் மற்றும் தேங்காயின் விலைகள்

editor