வகைப்படுத்தப்படாத

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

(UTV|AMERICA)-உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் (Paul Allen) தனது 65 வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என்று அழைக்கப்பட்டார்.

புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் தீவிர வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். தான் சம்பாதித்த பணத்தைச் சமூகத்துக்குத் திருப்பித்தர வேண்டும் என்ற உந்துதலில் உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்துவந்தார்.

‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தனது 65 வது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Over 600,000 people affected by drought – DMC

15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா விஜயம்