உள்நாடு

மே 9ஆம் திகதி உயிரிழந்த எம்.பி.க்கு இழப்பீடு

(UTV | கொழும்பு) – அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு 10 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த மே 09ஆம் திகதி நிட்டம்புவில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

Related posts

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

கல்வி அமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம் [PHOTOS]

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!