உள்நாடு

மே மாதம் சமர்பிக்கப்படவேண்டிய மின் கட்டண திருத்தம் எங்கே? தாமத்தப்படுத்துவதன் நோக்கம் என்ன? ஆணைக்குழு கேள்வி

மின் கட்டணத் திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியாகும் போது இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க வேண்டிய நிலையில் இதுவரையில் அது தொடர்பிலான முன்மொழிவுகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

குறித்த மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழியுமாறு மூன்று சந்தர்ப்பங்களில் மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் அதற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை அதிக இலாபங்களை ஈட்டியிருந்தது.

குறித்த இலாபத்தை மின் பாவனையாளர்களுக்கு வழங்க விருப்பமின்மையால் இவ்வாறு மின் கட்டண திருத்த முன்மொழிவை வழங்க தாமதப்படுத்தி வருவதாக ஒரு சாதாரண சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த மின் கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், தற்போது இருக்கும் கட்டணத்தையே தொடர்ந்தும் தக்க வைக்க அல்லது சிறிய தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்

Related posts

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 285 பேர்

ஜனவரி முதல் மின் கட்டண கொடுப்பனவுகள் காகிதத்தில் இல்லை? – டிஜிட்டல் முறையிலா?