(UTV | கொழும்பு) – இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 ரயில் சேவைகள் இயக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.