(UTV | கொழும்பு) – நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொவிட் மரணங்கள் நேற்று (22) பதிவாகின.
அதற்கமைய, நேற்று 46 கொவிட் மரணங்கள் பதிவாகின.
சுகாதார பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மரணங்கள் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளன.