உள்நாடு

மேலும் 376 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா மற்றும் கட்டாரில் இருந்து 376 இலங்கையர்கள் இன்று(23) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து 239 பேர் மத்தல விமான நிலையத்தில் ஊடாக இலங்கை வந்தடைந்ததாகவும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 35 பேரும், கென்யாவில் இருந்து 83 பேரும் மற்றும் கட்டாரில் இருந்து 19 இலங்கையர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இஸ்ரேலிய பிரதமர், ஹமாஸ் தலைவர்களுக்கு பிடியாணை!

MV Xpress pearl : ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை

கோட்டா கூறியதை மறுக்க முடியாது – மீண்டும் கார்டினல்